News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

Share via:

0 Shares

மிக்ஜாம் புயல் பேரிடர் காரணமாக பெருமழை வெள்ளத்தில் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் கடந்த அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதில் சென்னைதான் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. காட்டாற்று வெள்ளம் போல் தெருக்களில் ஓடிய மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டது. மேலும் பொதுமக்களின் வாகனங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவைகளும் சேதமடைந்தன. பெருநகர மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக நீர்தேக்கத்தை அகற்றினாலும், சில இடங்களில் இன்னும் மழைநீர் அகற்றப்படாமல் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

 

இதைத்தொடர்ந்து மின் கணக்கீடு குறித்து மின்சாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘மிக்ஜாம் புயல் காரணமாக அபராதமின்றி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு வருகிற 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கிய காரணத்தால் மின்கணக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் மாத மின் கணக்கீடு செய்யாத நுகர்வோருக்கு கடந்த அக்டோபர் மாத கணக்கீட்டின் படி மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

Share via
Copy link