Share via:
நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை எல்லாம் தி.மு.க. அரசு விடுதலை செய்யவேண்டும் என்பது இஸ்லாமியர்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவருகிறது. பல்வேறு காரணங்களால் இந்த பிரச்னை நீண்டுகொண்டே வருகிறது. இந்த உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் வாதம் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
மூன்று இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி “அரசே விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளது. ஆளுநர் முடிவுக்கு அரசு காத்திருக்கிறது. உச்சநீதிமன்றம் விடுவிப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்” என்று வாதத்தை முன் வைத்துள்ளார்.
இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றமே மாநில அரசின் விடுதலை முடிவை நிறைவேற்றி, ஆளுநரை கடிந்துகொள்ளும் வாய்ப்பிருந்தும், அரசு ஆளுநர் முடிவுக்கு காத்திருக்கிறோம் என்று கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால், தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு கவர்னர் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுவும் ஒரு வழக்காக நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதேநேரம், இந்த வாதம் விடுதலைக்கு எதிரானது அல்ல, உச்சநீதிமன்றம் விடுதலை செய்வதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தி.மு.க.வினர் கூறி வருகின்றனர்.
இஸ்லாமியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த விவகாரம் குறித்து தி.மு.க. தலைவர்கள் யாரும் பேசவே இல்லை என்பதுதான் ஆச்சர்யம்.
Copyright © 2023. All Rights Reserved.