News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

உலகமெங்கும் உள்ள தோழர்களின் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம், கொடியேற்று விழா இன்று பனையூரில் சிறப்பாக அரங்கேறியுள்ளது. மஞ்சள் கலரில் வாகை மலர் மட்டும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவப்பு மஞ்சள் நிறமும் இரண்டு யானைகளுக்கு நடுவில் வாகை மலர் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

கொடியேற்றி வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழியை நடிகர் விஜய் எடுத்துக்கொண்டார். அப்போது அவர், ‘’நாட்டின் விடுதலைக்காகவும் நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தைப் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்ப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு  சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

இந்த விழாவுக்கு விஜய்யின் பெற்றோர்கள் வந்த நிலையில் மனைவியும் பிள்ளைகளும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் புதிய கொடிக்கான ஒரு பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய்யின் கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘’தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது. உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுவும் மற்றும் வழக்கும் தொடுக்கப்படும்’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

அதேநேரம், இந்திய யானையைப் பயன்படுத்தாமல் ஆப்பிரிக்க யானை படத்தை வைத்திருக்கிறார் என்றும் ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. புதுசா வரும்போது எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதைப் பார்க்கலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link