News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

Share via:

0 Shares

சென்னையில் 25 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செயல்பட்டு வரும் மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் முதல்  படியாக கடந்த பொதுத்தேர்வில் அதிகளவில் மதிப்பெண் வாங்கிய மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக தேர்வு செய்து அவர்களுக்கு விழா எடுத்து உதவித்தொகை வழங்கினார். அதைத்தொடர்ந்து கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயலை முன்னிட்டு விஜய் மக்கள்  இயக்கத் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இன்ஸ்டாவில் உத்தரவிட்டார். அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை அவரவர் பகுதிகளில் வழங்கும்படி தெரிவித்திருந்தார்.

மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னையில் மொத்தம் 25 இடங்களில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று நடிகர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று (டிச.14) வடசென்னை மற்றும் தென் சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இந்த மருத்துவ முகாம்களில் பயனடைந்தனர்.

காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை இயங்கி இந்த மருத்துவ முகாம்களில் பல்துறை மருத்துவர்கள் பங்கேற்று மக்களின் உடல்நலனை ஆய்வு செய்து சிகிச்சை அளித்தனர்.  

Share via
Copy link