News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

Share via:

0 Shares

 

சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தும், பாரத மாதாவுக்கு ஜே போட்டும் கலகக்காரர்கள் புதிய நாடாளுமன்றத்தில் நுழைந்து கலர் கலராக புகை குண்டுகள் வீசியிருப்பது நாடு முழுக்கவே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் நினைவு நாளான டிசம்பர் 13ம் தேதியன்று மீண்டும் அதேபோன்று ஒரு நிகழ்வு நடந்திருப்பது, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை கேலிக்குரியதாக்கியிருக்கிறது. பார்வையாளர் கேலரியில் சாகர் ஷர்மா, மனோரஞ்சன் ஆகிய இருவரும் அவைக்குள் குதித்து கபடி விளையாடியது போன்று ஒவ்வொரு மேஜையாகத் தாவிச் சென்றது சிடிடிவியில் பதிவாகியுள்ளது.

இவர்களை எம்.பி.க்களில் சிலர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அதேநேரம் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் போராட்டம் நடைபெற்றது. ஒரு பெண், “அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுங்கள், சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்” என்று கோஷமிட்டுள்ள வீடியோ பரபப்பாகியுள்ளது. அதேபோல், இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே வண்ணப் புகை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நீலம் என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சின்ஹாவிடம் பாஸ் பெற்று உள்ளே நுழைந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது என்றாலும், இதுகுறித்து மத்திய அரசு இதுவரையிலும் எந்த வாக்குமூலமும் கொடுக்கவில்லை. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த பாதுகாப்பு குறைபாட்டுக்குப் பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும், பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சின்ஹாவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது. ஆனால், பா.ஜ.க.வினரோ இந்த அத்துமீறலுக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று புகார் சொல்லத் தொடங்கியிருக்கிறது.

இந்தியாவின் பாதுகாப்புச் சின்னம் என்று கருதப்பட்ட புதிய நாடாளுமன்றத்தின் மீது நடைபெற்றுள்ள தாக்குதல், இந்தியாவுக்கு விடப்பட்டுள்ள சவால். ஆனால், இதில் பா.ஜ.க. எம்.பி. ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதால், எந்த தகவலும் வெளியே வராமல் உண்மைகள் புதைக்கப்படும் என்றே மூத்த பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள்.

என்ன செய்யப்போகிறார் அமித் ஷா..?

Share via
Copy link