News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஸ்டாலினுக்கு அஞ்சு நாள் லீவு… ஃபேமிலி டிரிப்

தேர்தல் முடிந்தவுடனே ஜாலி வெளிநாட்டுக்குப் பறக்கப் போகிறார் என்றும் மாலத்தீவுக்குப் போகிறார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் அவரது ஐந்து நாள் ஃபேமிலி டிரிப் தமிழ்நாட்டுக்குள்ளே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடிக்கு சூடேற்றுவதற்காக மாலத்தீவு பறக்கிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இதற்கு தி.மு.க. சார்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்க முதல்வர் திட்டமிட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக திங்களன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் […]

இந்தியாவில் இருந்து வெளியேறுகிறதா வாட்ஸ் ஆப்..? நீதிமன்றத்தில் ஆவேசம்

இன்று வாட்ஸ் ஆப் பயன்படுத்தாத மனிதர்களே இல்லை எனும் அளவுக்கு செல்போனில் முக்கிய அம்சமாக இடம் பிடித்துள்ளது. மேலும் இந்த வாட்ஸ் ஆப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதேபோல் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு அம்சமான என்கிரிப்ஷனை உடைக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் என்று வாட்ஸ் ஆப் (WhatsApp) நிறுவனம் டெல்லி உயர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது இந்த […]

நயினார் நாகேந்திரனுக்கு எக்கச்சக்க சிக்கல்… 4 கோடி ரூபாய் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி சங்கர் ஜிவால் உத்தரவு

தேர்தல் நடைபெற்ற காலகட்டத்தில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் தொடர்பான வழக்கில் கொடுக்கப்பட்ட சம்மனுக்கு நயினார் நாகேந்திரன் டிமிக்கி கொடுத்துவருகிறார். இந்த நிலியில், தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கடந்த 6ம் தேதி இரவு சென்ற ரயிலில் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவிற்கு கொண்டு சென்ற ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அவரது ஓட்டல் ஊழியர் சதீஷ் […]

விவிபாட் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மோடி குஷியோ குஷி

பா.ஜ.க. விவிபாட் இயந்திரத்தில் மோசடி செய்தே ஜெயித்துவருகிறது என்று தொடர் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று கோரி ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் அபய் பக்சந்த், அருண் குமார் அகர்வால் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், “மின்னணு வாக்குப்பதிவு […]

மன்சூர் அலிகானுக்கு காங்கிரஸ் கட்சியில் என்ன பதவி..?  சத்தியமூர்த்தி பவனில் கடும் குழப்பம்

நடிகர் மன்சூர் அலிகான் எங்கே இருந்தாலும் அங்கே குழப்பமும் கலாட்டாவும் நிச்சயம் இருக்கும். நாம் தமிழர் கட்சியில் இருந்த மன்சூர் கடந்த 2021ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து தன்னுடைய கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் என்று மாற்றினார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு பேச்சுவார்த்தைக்குச் சென்றார். ஆனால், தொகுதிப் பங்கீடு உடன்பாடு அடையவில்லை என்ற கோபமானார். இந்த நிலையில் […]

ரத்னம் படம் கட்டப்பஞ்சாயத்துக்கு விஷால் ஆடியோ எச்சரிக்கை… ஸ்டாலினுக்கும் கலெக்டருக்கும் புகார்

 ரத்னம் படம் கட்டப்பஞ்சாயத்துக்கு விஷால் ஆடியோ எச்சரிக்கை… ஸ்டாலினுக்கும் கலெக்டருக்கும் புகார் வழக்கமாக விஷால் மீது எல்லோரும் வைக்கும் ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால், ‘எப்ப போன் செஞ்சாலும் எடுக்கவே மாட்டார்’ என்பது தான். இப்போது அதே குற்றச்சாட்டை விஷால் திருச்சி தஞ்சை ஏரியா தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் மீது வைத்திருக்கிறார். இதற்காக ஆடியோ வெளியிட்டு செகரட்டரி சிதம்பரம், பிரசிடென்ட் மீனாட்சி ஆகிய இருவருக்கும் கடுமையாக எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். விஷால் பணம் தர வேண்டியது இருக்கிறது என்று யாரோ […]

உணவுப் பொருளில் திரவ நைட்ரஜன் கலக்கப்பட்டால் அபராதம், உரிமம் ரத்து.. அதிரடி உத்தரவு

சமீபத்தில் கர்நாடகாவில் சிறுவன் ஒருவன் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்டதும் மூச்சு விடமுடியாமல் வலியால் துடித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக திரவ நைட்ரஜனை நேரடியாக எடுத்துக்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களில் கலக்கக்கூடாது எனவும் அனுமதி வழங்கப்படாத உணவுப் பொருளில் கலந்து தயாரிக்கவும், சமைத்து விற்பனை செய்யவும் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மூலம் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு  சென்னை உணவுப் […]

பெங்களூரில் மேகதாது அணை திட்டத்துக்கு ஆதரவாக திருமாவளவன் சர்ச்சை பேச்சு

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வெளிப்படையாக அறிவிப்பு செய்திருக்கிறார். இந்த நிலையில் கர்நாடக விடுதலை சிறுத்தைகள் அமைப்பு அணைக்கு ஆதரவாகப் போராடும் என்று திருமாவளவன் அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பெங்களூரில் இந்திய கூட்டணிக்கு ஆதரவாக ரூரல் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் திருமாவளவன். அப்போது, ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட பி.ஜே.பி. மோடிக்கு வாக்களிக்க […]

ராகுல் காந்தியின் அதிரடி பதிவு… 1,60,00,00,00,00,000 அதாவது 16 லட்சம் கோடி ரூபாய்

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவு பா.ஜ.க.வினரை அல்லுதெறிக்க விட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 12ஜி ஊழல் குறித்து பா.ஜ.க.வினர் எழுப்பிய 1.75 லட்சம் கோடி ரூபாயை நினைவு படுத்துவது போன்று 16 லட்சம் கோடி ரூபாய் பதிவு போட்டிருக்கிறார். அதாவது, நரேந்திர மோடி தனது கோடீஸ்வர நண்பர்களின் கடனைத் தள்ளுபடி செய்துள்ளார். 1,60,00,00,00,00,000 அதாவது 16 லட்சம் கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு பணம் இருந்தால் 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் […]

பிரதமர் மன்னிப்பு கேட்டே ஆகணும்… பொங்கியெழுந்த சீமான்

தேர்தல் பிரசாரத்தில் மோடியின் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுக்கு பல பக்கங்களில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. தேர்தல் கமிஷன் இதுகுறித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்பதும் உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் நாம் தமிழர் சீமான் பிரதர் மோடி மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ராஜஸ்தான் பரப்புரையின்போது இஸ்லாமிய மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையிலான பிரதமர் மோடியின் பேச்சு […]