Share via:
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் 10 தொகுதிகளில் 5 திமுகவுக்கும்
5 அதிமுகவுக்கும் கிடைத்தது. இந்த முறை 10 தொகுதிகளையும் கைப்பற்ற திமுகவும் அதிமுகவும்
போட்டி போட்டு வருகின்றன.
இந்த நிலையில் எதிர்பாராத திருப்பமாக ஸ்டாலின் சகோதரர் முக அழகிரியின்
ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக எடப்பாடி பழனிசாமியிடம் ஐக்கியமாகி வருகிறார்கள். திமுகவிடம்
மன்னிப்பு கேட்டு கட்சிக்குள் நுழைவதற்கு10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தும் பலன்
இல்லை என்பதால் இந்த தேர்தலுக்கு இப்படியொரு முடிவு எடுத்திருக்கிறார்கள்.
அழகிரியின் வலதுகரமாகத் திகழ்ந்த மன்னன் இணைந்த நிலையில், திமுக
முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் துணைச் செயலாளருமான
எஸ்ஸார் கோபியும் அவரது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சியில் இணைந்துகொண்டனர்.
இந்த நிலையில் மதுரைக்கு மட்டும் முக அழகிரி அதிமுகவுக்கு ஆதரவாகப்
பிரசாரம் செய்வார் என்று உறுதி கொடுத்திருக்கிறாராம். அப்படியென்றால், மதுரையில் திமுக
வெற்றி பெற சிக்கலாகும். குறிப்பாக பிடிஆர் தியாகராஜனால் ஜெயிக்கவே முடியாது என்கிறார்கள்.
