Share via:
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் அலிராஜ்பூர் அருகே காண்டலா தெவ்ரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு விவசாயத்திற்காக 20 அடி ஆழத்தில் ஆழ்துளை ஒன்று தோண்டப்பட்டிருந்தது. இது தெரியாமல் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். விளையாட சென்ற மகன் நீண்ட நேரமாக திரும்பி வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் தேடிச் சென்ற போது அவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அங்கு கூடிய பொது மக்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் ஒரு குழி தோண்டு சிறுவனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதன் பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்ததில், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்ட பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Copyright © 2023. All Rights Reserved.