News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நடிகர் பிரபாஸ், நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் நடந்தது போன்றும், அவர்களின் குழந்தை இதுதான் என்பது போல ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மூலம் ரசிகர்கள் புகைப்படங்களை மாஃபிங் செய்த நிலையில் அவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

பாகுபலி திரைப்படத்தில் நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் இணைந்து நடித்திருந்தனர். அதற்கு முன்னதாகவே இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும், லிவிங் ரிலேஷியன்ஷிப்பில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

 

இருப்பினும் நாங்கள் 2 பேரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று பிரபாசும், அனுஷ்காவும் அந்தர் பல்டி அடித்தார்கள். அதைத்தொடர்ந்து அவரவர் தங்கள் பணியில் மும்முரமாக இறங்கிவிட்டார்கள். 40 வயதைக் கடந்த 2 பேரும் எப்போதுதான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த நிலையில் தற்போது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் மூலம் பிரபாஸ், அனுஷ்கா திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் இருப்பது போல் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கற்பனை என்றாலும் கூட இது உண்மையில் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link