Share via:
கோவை, சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு
படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும்
ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது என்பதாலே,
புதிய ஆட்சிக்கு மக்கள் ஆதரவு கொடுத்தார்கள்.
இந்த நிலையில், கோவை சிறுமி விவகார்த்தை தவெக அமைச்சர்களும் அதிகாரிகளும்
கையாளும் விதம் மக்களை கொதிப்படைய வைத்திருக்கிறது. கோவை சிறுமி விவகாரம் குறித்து
அமைச்சர் கீர்த்தனாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் கீர்த்தனா, ‘இப்போது அட்மினிஸ்ட்ரேஷன்
ரிலேட்டாக பேசலாம். பொலிடிகல் சம்பந்தமாக அப்புறம் பேசலாம்’ என்று சிரித்தபடி பதில்
அளித்தார்.
அதேபோன்று அமைச்சர் விஜயலட்சுமியிடம் கோவை விவகாரம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‘’சட்டம் ஒழுங்கு நன்றாக தான் இருக்கிறது. சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான்
இருப்பார்கள் சார்’’ என்று சிரித்தபடி பதில் அளித்துள்ளார்.
இவர்கள்தான் இப்படி என்றால், போலீஸ் அதிகாரிகளும் இந்த கொடூர சம்பவத்தை
ஒரு காமெடி ஷோ போலவே கடந்து செல்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி தரும் சம்பவம். கோவையில்
10 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதற்கு விளக்கம் கொடுக்க வந்த காவல்துறை
உயர் அதிகாரி மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, பிரஸ் மீட்டில் ரொம்பவும் ஜாலியாக குலுங்கி
குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தார்.
ஒரு சிறுமி கொடூரமாக நாசமாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவத்தால் அந்த குடும்பத்தினர் ஒவ்வொரு நொடியும் எப்படியெல்லாம் கதறியிருப்பார்கள்.
இதை எல்லாம் நினைத்துப் பார்த்தால் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சிரிப்பு வருமா..?
பதவிக்கு வரும்போது பணிவும் பொறுப்பும்வரவேண்டும். இதையெல்லாம்
ரசிக்கிறாரா விஜய்..?
