Share via:
அமைச்சர் சக்கரபாணி தலைமையிலான உணவுத்துறை அலுவலர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் துறைசார்ந்த ஆலோசனைக் கூட்டங்களை அமைச்சர்கள் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (டிச.13) உணவு மற்றும் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவுத்துறை அலுவலர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் கே.கோபால், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குனர் பழனிசாமி உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளில் இணைந்து செயல்படுவது குறித்து உணவுத்துறை அலுவலர்களுடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Copyright © 2023. All Rights Reserved.