News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

Share via:

0 Shares

போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அதனை தடுக்கவும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பாடல் காணொலி இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.


பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கவும், அவற்றை தடுக்கவும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழக அரசின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாநிலத்தில உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைக்கு எதிரான மாணவர் குழுக்களும், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை மற்றும் இதர மாணவர்கள் இயக்கங்கள் மூலம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில் இன்று (டிச.13) தமிழ்நாடு காவல்துறை இயக்குனர்/ காவல்துறை படைத்தலைவர் வாயிலாக விழிப்புணர்வு காணொலி பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. இதற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வடிவமைத்துள்ளார்.


இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதன் ஆகிய இருவரும் இணைந்து காணொலிகளை வெளியிட்டனர்.


அமலாக்கப் பணியகத்தினால் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  ரீல்ஸ், ரீமிக்ஸ், கானா பாடல்கள் உருவாக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்ச்சியில் காவல்துறை கூடுதல் இயக்குனர், அமலாக்க பணியகம் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share via
Copy link