Share via:
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள் என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், 20 நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேசிய மற்றும் சர்வதேச வல்லுநர்கள் மற்றும் பங்கேற்பார்கள் கலந்து கொண்டனர். மேலும் கனிமொழி கருணாநிதி எம்.பி., அமைச்சர்கள் ரகுபதி, கீதாஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டின் தொடர்ச்சியில், தமிழக அரசின் மகளிர் குறித்த திட்டஙகள், மகளிர் ஆணைய செயல்பாடுகள் மற்றும் மீட்டெடுக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த திட்ட விளக்கப்பட கண்காட்சியை கனிமொழி கருணாநிதி எம்.பி. திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி வரவேற்று பேசினார். அதன் தொடர்ச்சியாக டாக்டர் காளிராஜ், உலக அழகி பிரியங்கா அனூன்சியா, அமெரிக்க ஐக்கிய தூதரக ஜெனரல் கிறிஸ்டோபர் ஹாட்ஷஸ், ஐ.ஜே.எம்.துணை தலைவர் கிளைர் வில்கின்சன் உளளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.
மாநாட்டின் போது, உலகளவில் தினந்தோறும் பெண்கள் எதிர்கொண்டு வரும் வன்முறைகள், அதனை தடுக்கும் வழிமுறைகள், காரணங்கள் உள்ளிட்ட கருத்துரைகளை வல்லுனர்கள் விரிவாக வழங்கினார்கள்.
Copyright © 2023. All Rights Reserved.