Share via:
கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உலகத்தையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று பரவல் பல லட்ச உயிர்களை பலி கொண்டதோடு கோடிக்கணக்கான மக்களை பாதித்தது. இதைத்தொடர்ந்து கிருமிநாசினி பயன்படுத்துவது, மாஸ்க் அணிவது என பழக்க வழக்கங்களை கடைபிடித்தார்கள் பொதுமக்கள். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பரவல் சிறிய அளவில் குறைந்தது. அதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் ஒமிக்ரான் உள்ளிட்ட பல்வேறு திரிபு நிலைகளில் மாற்றமடைந்தது. கொரோனா 2வது மற்றும் 3ம் அலைகள் பரவிய நிலையில், 2ம் நிலை பரவல் மேலும் பல உயிர்களை பலி கொண்டது.
இந்நிலையில் இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. அதன்படி கடந்த ஒரு மாதத்தில் 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இம்மாத (டிசம்பர்) முதல்வாரத்தில் 825 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் எண்ணிக்கையில் 90 சதவீதம் பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் சுவாசக்கோளாறுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Copyright © 2023. All Rights Reserved.