Share via:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (2024 ஜனவரி) 15ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தைய நாளான 14ம் தேதி போகி பண்டிகையும், 16ம் தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் 17ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை மண் மணம் மாறாமல் கொண்டாட விரும்புவது வழக்கம். எனவே பொது மக்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஆண்டுதோறும் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு அரசு விரைவு பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (டிச.13) தொடங்கியுள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 13ம் தேதி சொந்த ஊர் செல்பவர்கள் இன்று இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பயணிகளின் வசதிக்காகவும் அதிக தேவையை கருத்தில் கொண்டும் அரசு விரைவு பேருந்துகள் மட்டுமின்றி சிறப்பு பேருந்துகளையும் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Copyright © 2023. All Rights Reserved.