Share via:
ஆரோவில் அமைப்பின் 65வது நிர்வாகக்குழுக் கூட்டம் ஆரோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
ஆரோவில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று (டிச.12) ஆரோவில் அமைப்பின் 65 ஆவது நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும் ஆரோவில் நிர்வாக குழுத் தலைவருமான ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், ஆரோவில் அமைப்பின் செயலர் ஜெயந்தி ரவி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆரோவில் அமைப்பில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Copyright © 2023. All Rights Reserved.