News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

Share via:

0 Shares

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளில் இன்னொரு பிரபலமும் பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவர்தான், ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்து அசத்திய யுவராஜ் சிங்.

2007ம் ஆண்டு செப்டம்பர் 19. இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்குமான டி20 கிரிக்கெட் போட்டி நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய இந்தியா 16வது ஓவரில் தடுமாறிக் கொண்டிருந்தது. நம்பிக்கை நாயகன் தோனியும் அன்று அவ்வளவு சிறப்பாய் ஆடவில்லை. அந்த இக்கட்டான நேரத்தில்தான், யுவராஜ் சிங் களத்தில் இறங்கினார்.

அன்று யுவராஜ் சிங் மீது யாருக்கும் பெரிதாக அக்கறையும், மரியாதையும் இல்லை. ஆகவே, இவரும் எல்லோரையும் போல் தடுமாறப் போகிறார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், யுவராஜ் சிங் தாக்குப்பிடித்து ஆடத் தொடங்கினார்.

19வது ஓவர் ஸ்டுவர்ட் பிராட் வீசிய முதல் பந்து. படு வேகமாக வந்த பந்தை அதே வேகத்தில் அடித்து விளாசினார், அது சிக்ஸர். இரண்டாவது பந்தை அடித்து விளாசுகிறார். அதுவும் சிக்ஸர். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது பந்துகள். பந்துகள் வீசப்பட்ட வேகத்தில் மைதானத்தை தாண்டி ரசிகர்களிடம் சென்று விழுகின்றன. இந்திய அணி, இங்கிலாந்து அணி, ரசிகர்கள், வர்ணனையாளர் உட்பட மொத்த உலகமுமே பிரமித்து வாயடைத்து நின்றது. 19வது ஓவரின் கடைசி பந்து மீண்டும் கோட்டை தாண்டி, கேட்டை தாண்டி ரசிகர்ளிடம் சென்று சேர்கிறது. வெறும் 16 பந்துகளில் 58 ரன்கள். 3 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள். அவர்தான் அன்றைய நாளின் ஆட்ட நாயகன்.

அன்றைய தினம் ஒட்டுமொத்த உலகமும் வியந்து ஆச்சர்யப்பட்டு, அதிசயிக்கும் நாயகனாக உருமாறினார் யுவராஜ் சிங். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்தில் தன்னுடைய சாதனையை அழுத்தமாகப் பதித்தார் யுவராஜ்.

1981ல் சண்டிகரிலே யோகராஜ் சிங்கிற்கு மகனாக பிறந்தவர் யுவராஜ் சிங். இளமையிலேயே டென்னிஸ் மீதும், ஸ்கேட்டிங் மீதும் ஆர்வமாய் இருந்த யுவராஜை கிரிக்கெட் பக்கம் திருப்பிவிட்டதே அவரது அப்பாதான். பஞ்சாப் மாநில கிரிக்கெட் வாரியத்தில் விளையாடிய யுவராஜ் சிங் 1999-2000 ராஞ்சி கோப்பை போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தினார். அவரது அபாரமான திறமையை கண்ட தேசிய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இவரை தேர்வு செய்தது.


யுவராஜுக்கு மிகப்பெரிய ரசிகர்களை ஏற்படுத்தியது, அவரை மிகப்பெரிய நட்சத்திர வீரராக மாற்றியது

யானைக்கும் அடிசறுக்கும் என்பதுபோல் யுவராஜுக்கும் கடுமையான காலங்கள் உருவாகின. 2003ல் நடந்த ஐசிசி உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய போட்டியில் ஒரு ரன் கூட எடுக்காமல் தோல்வியடைந்த கதையும் உண்டு. ஆனால் யுவராஜ் நம்பிக்கை இழக்கவில்லை. தொடர்ந்து பயிற்சி செய்தார்.
2005 ஆம் ஆண்டு யுவராஜின் முழுவேகத்தை ரசிகர்கள் முதன்முறையாக பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்தியன் ஆயில் கப் ஆட்டத்தில் தனது முழு திறமையை வெளிப்படுத்திய யுவராஜ் சிங் நான்கு ஆட்டங்களில் மொத்தம் பெற்ற ரன்கள் 192. அதற்கு பிறகு விளையாடிய பல ஆட்டங்களிலும் தனது ரன் 40க்கும் குறையாமல் இருக்கும்படி விளையாடினார்.

2007ல் முதன்முறையாக இந்திய அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் யுவராஜ் சிங். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. உலக டி20 கோப்பையில் இங்கிலாந்துடன் மோதியது இந்தியா. 6 பந்துகளையும் சிக்ஸர் விளாசி தள்ளிய யுவராஜ் 12 பந்துகளில் 50 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அன்றைய மேட்ச்சின் ஆட்ட நாயகனாக யுவராஜ் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு பிறகு 2011ல் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 28 வருடங்கள் கழித்து உலக கோப்பையை வென்றது. மொத்தமாக 4 அரைசதங்களை வீழ்த்தி 362 ரன் எடுத்து அந்த உலக கோப்பையின் ஆட்டநாயகன் விருதை வென்றார் யுவராஜ் சிங்.


உலக சாம்பியனாக வலம் வந்தவரை மீண்டும் சறுக்கல்கள் சந்தித்தன. இந்த முறை புற்றுநோய். இதை கேட்டதும் இந்திய ரசிகர்கள் கிடுகிடுத்து போனார்கள். 2011 உலக கோப்பைக்கு பிறகு புற்றுநோய் தாக்கத்தால் தற்காலிகமாக அவர் கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டியதாய் போயிற்று. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இவருக்காக பிரார்த்தனை செய்தது. அந்த சோதனையிலும் வேதையிலும் இருந்து மிகுந்த தன்னம்பிக்கையுடன் மீண்டுவந்தார் யுவி.

.

உடல் நலமாகி திரும்ப வந்த யுவராஜ் சிங்குக்கு 50 ஓவர் கொண்ட பெரிய ஆட்டங்கள் விளையாட சிரமமானதாக இருந்தது. ஐபில் டி20 போன்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்த தொடங்கினார். தொடர்ந்து பஞ்சாப் அணியில் விளையாடியவர். புனே, பெங்களூர்,டெல்லி அணிகளோடும் இணைந்து விளையாடினார். பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். பின்னர் முழுமையாக கிரிக்கெட் விளையாட்டுகளிலிருந்து விலகினார்.


இந்திய கிரிக்கெட் கவுன்சில் யுவராஜை பெருமைப்படுத்தும் விதமாக 2012 ல் அர்ஜுனா விருதை அளித்தது. இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மஸ்ரீ விருதை கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து யுவராஜ் விலகினாலும் இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்ற ஒரு பட்டியலை தயாரித்தால் அதில் முதல் 10 பேரில் கண்டிப்பாக யுவராஜ் இருப்பார். ஏனென்றால் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி சாதனை படைத்திருக்கிறார்.

1981-ல் சண்டிகர் செக்டர் 12 மருத்துவமனையில் டிசம்பர் (12-ம் மாதம்) 12-ம் தேதி மதியம் 12 மணிக்குப் பிறந்தவர் யுவராஜ். அந்த ராசி காரணமாக கிரிக்கெட் விளையாடும்போது அணியும் ஜெர்சி எண் 12 ஆனது.

டி20 கிரிக்கெட்டின்  ‘சூப்பர்மேன்’ என்றழைக்கப்படும் யுவராஜ், டி20 போட்டியில் நீளமான சிக்ஸரை விளாசியவர் என்ற பெயர் எடுத்தவர். 119 மீட்டர் தொலைவுக்கு அந்த சிக்ஸரை விளாசினார். 2008-ல் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட்டில் 387 ரன்னை இந்தியா துரத்தியபோது யுவராஜ் சிங் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது இந்தியாவின் வெற்றிக்கு உதவியது. இந்தியாவின் துரத்தலில் 5-வது விக்கெட்டுக்கு அமைந்த மிகப் பெரிய பார்ட்னர்ஷிப் இதுதான்.

உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் 50 ரன்களையும் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஒரே வீரர் யுவராஜ்தான். 2011-ல் பெங்களூருவில் அயர்லாந்துக்கு எதிராக இதைச் சாதித்தார். 2011 உலகக் கோப்பையை  வெல்லக் காரணமான நாயகன் யுவராஜ். ஆரம்ப கட்ட புற்றுநோயும் ரத்த வாத்தியும் இருந்தபோதும்கூட உலகக் கோப்பையை வென்ற பிறகே சிகிச்சைக்குச் சென்றார்.

சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு புகழ்பெற்ற இங்கிலாந்தின் யார்க்‌ஷையர் கவுண்டி அணிக்கு ஒப்பந்தமான ஒரே வீரர் யுவராஜ் சிங். சில வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே கிடைத்த பெருமையில் யுவராஜும் அடக்கம். இந்தியாவில் யுவராஜ் சிங்குக்கு ஏராளமான விசிறிகள் இருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள் யுவராஜ் சிங்…

 

Share via
Copy link